சிவகங்கை: சீரியலை ரசிக்கும் அம்மாக்கள்.. சீரழியும் பிள்ளைகள்; ஏடிஎஸ்பி பேச்சு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏரியூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மாணவர்களும் பெற்றோர்களும் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் வண்ணம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 

அப்போது மாணவர்களிடம் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார் என கேட்க விஜய் என்றும், ஹீரோயின் நயன்தாரா என்றும் கூறினர். பிள்ளையை நன்றாக வளர்த்துள்ளீர்கள் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெற்றோர்களை பாராட்டினார். பின்பு குட்டி கதை சொல்லி, மாணவர்களுக்கு பள்ளியில் கட்டணம் விஜய்யோ, அஜித்தோ கட்டுவதில்லை பெற்றோர்கள்தான் கட்டுகிறார்கள். ஆகவே மாணவர்களுக்கு தந்தை தான் ஹீரோ, தாய் தான் ஹீரோயின் என்று உணர வைத்தார். 

ஒரு குழந்தை நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடலையும் பாடிக் காண்பித்தார். அம்மா சொன்னால் மகன்கள் கேட்பார்கள். ஆனால் அம்மாக்கள் சீரியலை ரசித்து கொண்டிருந்தால், குடும்பம் சீரழியும், பிள்ளைகள் செல்போனுக்கு அடிமையாகி விடுவர். உங்கள் பிள்ளைகளுக்கு மதிப்பை சொல்லிக் கொடுங்கள், என்றார்.

தொடர்புடைய செய்தி