சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும், காப்பீட்டு திட்டச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.