சிவகங்கை: இளைஞர் வெட்டி கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மனு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மின்நகரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சண்முகநாதன்(27). இவரை நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை அருகே 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. 

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சண்முகநாதனுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் சண்முகநாதனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி