குடிநீர் பிரச்சனையை தீர்க்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால், முறுக்குக்காரர் தெருவில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ. 35 முதல் 40 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புதிய சட்டமன்ற உறுப்பினரும் உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி