சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், எஸ்.புதூர் ஒன்றியத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஒன்றிய செயலாளர் கருப்பையா, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் பொன்மணி பாஸ்கரனுக்கு தலைமை கழகம் சீட் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் எஸ்.புதூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடைநிலை தொண்டர்களாக இருப்போம் என்றும் பேசினார்.