சிவகங்கை: சட்டவிரோத கருக்கலைப்பில் கர்ப்பிணி உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே வீரபிரபுவின் மனைவி சின்னபொன்னு (23) கர்ப்பமாக இருந்த நிலையில், நவம்பர் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டதால் உயிரிழந்தது பரிசோதனையில் தெரியவந்தது. விசாரணையில், நாகூர்அம்மாள் (50) என்பவர் சின்னபொன்னுவுக்கு கருக்கலைப்பு மாத்திரை வழங்கியது கண்டறியப்பட்டது. நாகூர்அம்மாள் தலைமறைவாகியுள்ள நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி