சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த (17) வயது மாணவி, திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இரவு வீட்டில் தூங்கிய மாணவி, எழுந்திருக்கவில்லை. அவரை உறவினர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.