சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. பல்வேறு நேர்த்திக்கடனுக்காக காணிக்கையாக 4 லட்சம் தேங்காய்களை பக்தர்கள் தேரடிப் பணிகளில் வீசி உடைத்தனர். 100க்கும் மேற்பட்டோர் தேங்காய்களை சேகரித்தபோது, சிலர் தங்கள் தலையைப் பாதுகாக்க ஹெல்மெட் அணிந்தும், உடல் அடிபடாமல் இருக்க பான்ச் கட்டிக் கொண்டும் காணிக்கை செலுத்தினர்.