சிவகங்கை: காட்டு எருமை தாக்குதலால் நெல் வயல்கள் சேதம்

சிவகங்கை மாவட்டம் எஸ்புதூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு எருமைகள் புகுந்து நெல் வயல்களை சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறை, வேளாண்மை துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடன் வாங்கி பயிரிட்ட நெல் செழித்து வளர்ந்த நிலையில், காட்டு எருமைகள் இரவு நேரங்களில் வயல்களில் புகுந்து மேய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் இழப்பீடு வழங்கவும், காட்டு எருமைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி