அதனைத் தொடர்ந்து அரிய நாச்சி அம்மன் கோவில் வளாகம் அம்பலக்கல் முன் சாமி ஆட்டம் ஆடி ஆண்கள் பெண்கள் இருவரும் கும்மி அடித்து பாரம்பரிய மகுடு தப்பு அடித்து இங்கிருந்து ஊர்வலமாக சென்று லெக்கம்மா காட்டில் கிராம மக்கள் ஒன்று கூடி கும்மி அடித்து இன்று இரவு சுமார் 8 மணி அளவில் வழிபாடு செய்தனர். பங்குனி பொங்கல் திருவிழா துவங்கிய நாள் முதல் தினசரி இரவு லெக்கம்மா காட்டில் ஆண்கள் பெண்கள் இருவரும் கும்மி ஆட்டம் நடைபெறும். பத்தாம் நாள் பெண்கள் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும் கொழுக்கட்டை சூறையிடும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஆண்கள் வைந்தானை அடித்து குச்சிகளை சூறையிடுவர். அதனைத் தொடர்ந்து காப்பு அறுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்