சிவகங்கை மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் உள்ள குன்றக்குடி, தருமைக் கயிலைக் குருமணி மேல்நிலைப்பள்ளியில் இன்று (7. 2. 2026) தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த "நலம் காக்கும் ஸ்டாலின்" பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தலைமையில், தவத்திரு பொன்னம்பல அடிகளார் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.