தொடக்கத்தில் திருப்பத்தூருக்கு வருகை புரிந்த செயலாளருக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்தே கட்சியினர் மாலை அணிவித்து சால்வை அளித்து நகருக்குள் அழைத்துவந்தனர். அதனைத் தொடர்ந்து திருப்புத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மருது பாண்டியர்கள் நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக வந்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் கார் எதிர்பாராத விதமாக டிராபிக்கில் மாட்டிக் கொண்டது.
இதனால் அங்கு இருந்த திமுக கட்சி நிர்வாகிகள் பரபரப்பு அடைந்தனர். சம்பவத்தை அறிந்து வந்த திருப்புத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் உடனடியாக அமைச்சரிடம் சம்பவம் பற்றி எடுத்துக் கூறி பின்னர் அங்கிருந்த வாகன நெரிசலை சரி செய்ய முயற்சித்தனர். இதில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.