சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து பயணியர் நிழற்குடையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் திரு. அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், வட்டாட்சியர் பரிமளம், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.