சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.எஸ்.கோட்டை கிராமத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் (Transformer) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் (பொ) ஜான் எஃப் கென்னடி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.