ஸ்ரீ வில்வபுரீஸ்வரர் திருக்கோவிலில் பால் குடம் வைபவம்

சிவகங்கை நகரின் மையப்பகுதியில் உள்ள பழமையான ஸ்ரீ வில்வபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு வருட அபிஷேக விழாவை முன்னிட்டு பால்குட வைபவம் நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நாக தேவதை அம்மன் திருக்கோவிலில் இருந்து பால்குடங்கள் மற்றும் முளைப்பாரிகளை மங்கள வாத்தியங்களுடன் நகர்வலம் வந்து கோவிலை அடைந்தனர். பின்னர், பக்தர்கள் சமர்ப்பித்த பால் கொண்டு மூலவர் ஸ்ரீ வில்வபுரீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் மற்றும் தீப ஆராதனையுடன் விழா நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி