சிவகங்கை: விஜய் கட்சி சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்- வீடியோ

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டப்பந்தயம் 8 கிலோ மீட்டர் தூரம் சேவுகப்பெருமாள் கோவில் வளாகத்தில் துவங்கி நகரின் முக்கிய சாலை வழியாக காவல் நிலையம் வரை சென்று கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. 

இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சிறுவர், சிறுமியர், பெண்கள், பெரியவர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் முதலாவதாக வந்த மூன்று நபர்களுக்கு மட்டும் ரொக்கப்பரிசுகளும், மீதமுள்ள நபர்களுக்கு ஆறுதல் பரிசு, வெற்றிச் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி