குன்றக்குடி அருகே நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே நேமம் கிராமத்தில், அதிமுகவின் 54வது துவக்க விழா மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, திருப்பத்தூர் சட்டமன்ற இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் போட்டியை துவக்கி வைத்தார். 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளில் நடந்த இந்தப் போட்டியில், பல மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். வென்றவர்களுக்கு சான்றிதழ்கள், கேடயம், பதக்கம், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு வயது மற்றும் உடல்நிலை கொண்டோர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி