காரைக்குடி: இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்தவர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தில் பேருந்தில் சென்ற 27 வயது பெண் ஒருவரை, அவரது இருக்கையின் பின்புறம் அமர்ந்திருந்த கிருஷ்ணன் (54) மற்றும் அடைக்கப்பன் (58) ஆகியோர் செல்போனில் படம் பிடித்தனர். இது குறித்து அந்தப் பெண் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி