குடமுழுக்கு நாளான வெள்ளிக்கிழமை காலை மல்லன் கருப்பர் கோயில் வகையறா பங்காளிகள், விழாக் குழுவினர் சீர் எடுத்து வந்தனர். பிறகு பூர்ணாகுதியைத் தொடர்ந்து ஸ்தானிகர் சேவற்கொடியோன் தலைமையில் சிவாச்சாரியர்களால் கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னர் மகா தீபம் காட்டப்பட்டு மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில், நடுவிக்கோட்டை, மேலையூர், கீழையூர், மேல்குடி, கண்டரமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.