திருப்பத்தூர் அருகே மார்க்கண்டேயன்பட்டியில் தாமரை கண்மாயில் கிராம மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்தினர். கிராம பொது நிதி திரட்டும் நோக்கில், முதலில் குறிப்பிட்ட தொகை வசூலித்து, ஊத்தா மூலம் மீன்பிடிக்க அனுமதித்தனர். பின்னர் மற்றவர்களும் கச்சா, அரி வலை போன்றவற்றை பயன்படுத்தி ஜிலேபி, கெண்டை, கெளுத்தி, கட்லா போன்ற மீன்களை பிடித்தனர். இந்த நிகழ்வில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.