இதில் ஆத்திரமடைந்த அரியசாமி, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து மானாமதுரை போலீசார் அரியசாமி உட்பட 12 பேரை கைது செய்தனர். சிவகங்கையில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் இறந்துவிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட அரியசாமிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்ற ஒன்பது பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.