சாம்பல் புதன் திருப்பலியுடன் தவக்காலம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புனித அமல அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியுடன் கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலத்தை தொடங்கினர். பங்குத்தந்தை அற்புதஅரசு, தவக்காலம் நம்மை புனிதப்படுத்தி, பாவங்களில் இருந்து விடுதலை பெற உதவும் காலம் என்றும், சாம்பல் மண்ணின் தன்மையையும், கடவுளின் முன் நாம் எளியவர்கள் என்பதையும் உணர்த்தும் அடையாளம் என்றும் கூறினார். பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசி, 'மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்' என அறிவுறுத்தினார். இந்த ஆண்டு ஈஸ்டர் ஏப்ரல் 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தவக்காலத்தில் அசைவம், கொண்டாட்டங்களை தவிர்த்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை, திருவிருந்து ஆராதனைகள் நடைபெறும். வரும் மார்ச் 29ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி