சிவகங்கை: தேரோட்டத்தினை துவக்கி வைத்த குன்றக்குடி அடிகளார்

சிவகங்கை மாவட்டம் சதுர்வேதமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் மாசி மக பெருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (மார்ச் 1) திருத்தேரோட்டத்தை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் தேரை இழுத்து வியக்கத்தக்க ஒற்றுமையை வெளிப்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி