நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், எழுத்தாளர் நூலக நண்பர்கள் திட்ட உறுப்பினர் ஈஸ்வரன், நூலக நண்பர்கள் திட்ட ரமேஷ் கண்ணன் மற்றும் பகிரத நாச்சியப்பன், ஹேமா மாலினி, செல்லமணி, சேவுகன், சாஸ்தா சுந்தரம், சிவசங்கரி, திலகவதி, கருணாகரன், கோவிந்தன் கலந்து கொண்டனர்.
இதில் கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வது, டிஎன்பிஎஸ்சி படிக்கும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவது, ஆர்வோ பிளான்ட் நிறுவுவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில் நூலகர் கனகராஜ் நன்றி கூறினார்.