பின்னர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் இன்னும் தூய்மையை மேம்படுத்த வேண்டும் என்றவர், மறுசுழற்சி செய்வதை அதிகப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், உலக வல்லரசை காட்டிலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் உள்ளதாகவும். இந்தியா முழுவதும் உள்ள 6 கோடி தெரு நாய்களால், பலர் கடிபடுவதும், விபத்தில் சிக்குவதும் நடைபெற்று வருகிறது.
தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கியது பத்தாது. அதற்கான விளக்கத்தை அரசு வழங்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் எம். பி. தெரிவித்தார்.