சிங்கம்புணரி அம்மன் கோயிலில் கரக விழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மேலத்தெரு மூன்று கரை பங்காளிகளுக்குப் பாத்தியப்பட்ட அம்மன் கோயிலில் திங்கள்கிழமை நள்ளிரவில் கரகம் அலங்காரம், சுவாமி அழைப்பு நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, பூக்குழி இறங்குதல் நடைபெற்றது. இதில் கோயில் சாமியாடிகள், பூசாரிகள் மற்றும் நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழியில் இறங்கினர். பக்தர்களுக்கு பொங்கல், பானகம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு சிங்கம்புணரி மேலத்தெரு மூன்று கரை பங்காளிகள் மற்றும் ஆறுபுள்ளி அம்மன் கோயில் பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி