சிவகங்கை: சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு, அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், சிவகங்கை மாவட்டத்தில் மருந்து அல்லது மருத்துவர் இல்லையென ஆதாரத்துடன் கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி