சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெப்ப சலனம் காரணமாக பலத்த காற்றுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அக்னி நட்சத்திர வெப்பத்தை போல் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வந்த நிலையில் திடீரென பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் கடும் வெப்பமான சூழ்நிலையில் தவித்து வந்த பொதுமக்கள் இம்மழையின் வருகையினால் குளிர்ந்த சீதோஷண நிலை பெற்று வருகின்றனர்.