சிவகங்கை மாவட்டம் மானகிரிக்கு உட்பட்ட தளக்காவூரின் தெருக்களில் கழிவுநீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது. இதில் நடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் பலவித நோய்களுக்கு ஆளாகி வருவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் என பல இடங்களில் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறும் பகுதி வாசிகள் இனிமேலாவது உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி சுகாதாரம் காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.