தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வரும் முன்பே, அருகில் இருந்த வீட்டிற்கும் தீ பரவியது. வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருப்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைக்க முடியாமல் மிகவும் போராடினர். அக்கம்பக்கத்தினரும் நள்ளிரவில் முதல் அதிகாலை வரை வீட்டுப்பகுதிகள் மற்றும் தெருவில் உள்ள நீர்தேக்கத் தொட்டிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயானது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்தில் மரப்பட்டறையில் இருந்த மரப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மேலும் அருகில் உள்ள வீட்டிலிருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நாசமாயின.