சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏ. புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி ஷாலினி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் கணிதப் பாடத்தில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.