திருப்பத்தூர்- மதுரை நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், சின்ன மாடு பிரிவில் 22ஜோடிகளும் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மையில் தூரமும், சின்ன மாடு பிரிவிற்கு 6 மைல் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகையும், பரிசுகளும் விழா குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியிணை காண அதிகாலை முதல் சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ஆண்கள் பெண்கள், குழந்தைகள்என, ஆயிரக்கணக்கானோர் உற்சாகதோடு கண்டுகளித்தனர்.