சிவகங்கை: கையை வெட்டிய 4 பேர் கைது

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை கிராமத்தில், கருப்பையாவின் மகளை பக்கத்து வீட்டு உறவினர் முத்துவீரனின் மாமியார் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, முத்துவீரன் கருப்பையாவையும் அவரது மகன் செல்வராஜையும் வெட்டுவதாக மிரட்டியுள்ளார். பின்னர், தனது உறவினர்களுடன் வந்து செல்வராஜை கத்தியால் தாக்கி அவரது ஒரு கையை துண்டித்துள்ளார். கருப்பையா அளித்த புகாரின் பேரில், குன்றக்குடி காவல்துறையினர் முத்துவீரன் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி