இதனை தொடர்ந்து இன்று காலை காளாப்பூர் சூரக்குடி, கள்ளம்பட்டி, புதுப்பட்டி, மூவன்பட்டி போன்ற சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வருகை தந்த கிராம மக்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த ஊத்தா கூடை , கச்சா , கொசுவலை , அரிவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க காத்திருந்தனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து சாமி கும்பிட்டு துண்டு வீசியதும் மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன் கரையோரம் காத்திருந்த மக்கள் மின்னல் வேகத்தில் ஊத்தா கூடையுடன் ஒடி சென்று கண்மாயில் துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை தந்த மக்களுக்கு விரா, கட்லா, கெண்டை கெழுத்தி உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்