இதில் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வகை மீன்கள் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும், நாட்டு மீன்களான கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, குரவை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களை சாக்குப்பைகள், தென்னைநார் பெட்டிகளில் அடைத்து வீடுகளுக்குக் கொண்டு சென்றனர். இந்த மீன்பிடித் திருவிழாவில் முதலில் ஊத்தா கூடை மூலம் மட்டுமே மீன்கள் பிடிக்க அனுமதித்தனர். பின்னர் கிராமத்து மக்கள் கண்மாய்க்குள் இறங்கி வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களைக் கொண்டும் மீன்களைப் பிடித்தனர். இன்று பள்ளி விடுமுறை என்பதால் சிறியவர் முதல் முதியவர் வரை கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து மகிழ்ச்சியுடன் சென்றனர். இருப்பினும் ஊத்தா கூடை மூலம் மீன் பிடிக்க வந்தவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?