சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். "திமுக ஆட்சி மக்களுக்கு எதிரான ஆட்சியாகும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கவிஞர் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றெல்லாம் சொன்னார்கள் ஆனால் கஞ்சா நிறைந்த தமிழ்நாடாக இது இருக்கிறது" என்று அவர் கூறினார். மேலும், "கனிம வளங்களை கொள்ளை அடிப்பதே திமுக தான், முதலமைச்சர் சொல்ல தயாரா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.