கடந்த மூன்று நாட்களாக இத்தெருவில் இவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டைப் பார்த்தபோழுது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து பூட்டிய நிலையில் இருந்த ஆதிரத்தினமூர்த்தி வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது அவர் கட்டிலில் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததும், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அழுகிய நிலையில் தூர்நாற்றம் வீசியதும் தெரியவந்தது.
மேலும் அவரது மனைவி பரிமளா பூட்டிய வீட்டிற்குள்ளேயே இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஆதிரத்தினமூர்த்தி சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இவரின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.