நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தில் தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவப் படத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சேதமடைந்த இடத்தில் வெண்கல சிலை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பி. எம். டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரக பகுதியில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.