சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி RM. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இணைய பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் டி-சர்ட்களை பரிசாக வழங்கினார். மாவட்ட தகவலியல் அலுவலர் ராஜகுரு, முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கல்வி அலுவலர் மாரிமுத்து, தலைமையாசிரியர்கள் முருகன், கலாநிதி, வட்டாட்சியர் நாகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.