புதிய மீன் வளர்ப்புக்கு புதிய தகவல் வெளியிட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் (2023-2024) கீழ், புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைப்பதற்கு 40% மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார். ஒரு ஹெக்டேர் பரப்பளவில் குளம் அமைக்க ₹7 லட்சம் செலவாகும். இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர், சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மீன்வள ஆய்வாளர் அல்லது மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி