இத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து (ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம்) 1,200 பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும், பயனாளி ஏழைப் பெண்ணாக இருத்தல் வேண்டும், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அதுமட்டுமன்றி, பயனாளி 30% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும், பயனாளி அந்த (சம்பந்தப்பட்ட) கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.