சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் குணசேகரன் இவர் வாரச்சந்தை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் வாரச்சந்தை பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர் அந்த சோதனையில் திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (30) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 540 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.