உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

திருப்பத்தூர் அருகே பட்டமங்கலம் நாடு ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பட்டமங்கலம்-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சின்ன மாடு பிரிவில் 20 ஜோடிகளும் என மொத்தம் 29 ஜோடிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகை, குத்துவிளக்கு மற்றும் தென்னை மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி