கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே கோவினிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெரிய மாட்டு வண்டி பிரிவில் 16 ஜோடிகளும், சிறிய மாட்டு வண்டி பிரிவில் 32 ஜோடிகளும் 7 கிலோமீட்டர் தூர எல்லையில் விறுவிறுப்பாகப் போட்டியிட்டன. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி