சிவகங்கை: உண்டியலை உடைத்து திருட்டு; சிசிடிவி காட்சி வெளியீடு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள சடையாண்டி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கிராம கோவிலாகும். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் உண்டியல் உடைத்து சில்லரை காசுகளை போட்டுவிட்டு பணத்தை மட்டும் கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டு சென்றனர். 

காலையில் உண்டியல் திறந்துகிடப்பதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து சிங்கம்புணரி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து சந்தேகமான முறையில் கோவில் உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

அதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் தயாளன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் இன்று மாலை அரசினம்பட்டி பிரிவு சாலை அருகே போலீசார் வாகனத் தனிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய இருசக்கர வாகனம் போல் வந்ததால் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி