இடையமேலூரில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 102வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இடையமேலூரில் கண்டாங்கிப்பட்டி ஓக்குப்பட்டி அழகிச்சிப்பட்டி கிளைக்கழக திமுக சார்பில் சிவகங்கை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பி. மந்தகாளை தலைமையில் முத்தமிழ் அறிஞரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் அதிமுக தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மந்தகாளை தலைமையில் திமுகவில் இணைந்தனர். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி