தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி நடைபெற்றது. நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில், தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது, தீயைக் கட்டுப்படுத்தும் முறைகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. எரிபொருள் விற்பனை நிலையப் பணியாளா்கள், தனியாா் தங்கும் விடுதி பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி