காரைக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். காரைக்குடி, இபி ஆபிஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி (35) என்பவர் ஈ. வி. ஆர். நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. போலீசார் மர்ம நபரைத் தேடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.