ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள நல்லூரணி மேற்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. யாக சாலைகளில் ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித அபிஷேக நீரை கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது அபிஷேக நீர் தெளிக்கப்பட்டது. ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது. முன்னாள் சேர்மன் சஞ்சீவி குடும்பத்தார்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி