சிவகங்கை: ஆடி திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியில் அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மன் அந்தப் பகுதி மக்களிடையே மிகுந்த பிரசித்தி பெற்றதாகும். கடந்த ஜூலை 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் விழாக்கள் துவங்கின நிலையில் எட்டாம் நாள் இன்று ஏராளமான பக்தர்கள் என்பீல்டு பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து கோவிலை வந்தடைந்தது. அங்கு அன்னை ஸ்ரீ காமாட்சி பரமேஸ்வரி அம்மனுக்கும் பரிவார தெய்வங்களான விநாயகர் பாலமுருகன் நந்தி பலிபீடம் உள்ளிட்ட பராசக்தி அம்சங்களுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி